மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
தற்போது அரூர், மாம்பாடி வேப்பம்பட்டி,கடத்தூர், சிந்தல் பாடி பொம்மிடி, பாலக்கோடு,பென்னாகரம், புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் மரவள்ளிக்கிழங்கு முதன்மையானதாக உள்ளது. இதனால் அதிக அளவில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மரவள்ளி அறுவடை நடைபெறும். அறுவடை முடிந்ததும், உடனே மரவள்ளி குச்சியை மீண்டும் நடுவதற்கு தொடங்கி விடுவார்கள். தற்போது அரூர், மாம்பாடி வேப்பம்பட்டி,கடத்தூர், சிந்தல் பாடி பொம்மிடி, பாலக்கோடு,பென்னாகரம், புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழை எதிர்பார்த்த அளவு இல்லாமல், விளைச்சல் குறைவாகவே இருப்பதனால், மரவள்ளி கிழங்கிற்கு கொள்முதல் விலை மிகவும் குறைவாகவே இருந்ததால், விவசா யிகள் நஷ்டத்தையே சந்தித்தனர். எனினும், போதிய மழை இல்லாத காரணத்தால், மீண்டும் மரவள்ளி கிழங்கு சாகுபடியிலேயே ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story