விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை
சவ்சவ் காய்
திண்டுக்கல் அருகே சிறுமலையில் சவ்சவ் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மூலிகை மிகுந்திருப்பதால் இங்கு விளையும் சவ்சவ் காய்களுக்கு தனி கிராக்கி உண்டு. இங்கிருந்து திருச்சி,மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களக்கும்,வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தற்போது வெயில் சீதோசன நிலை அதிகமாக இருப்பதால் சவ் சவ் சீசன் விளைச்சல் குறைந்துள்ளது.இதனால் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சிப்பம் (45 கிலோ ) ரூ.900முதல் ரூ.1000 வரை விற்பனையாகிறது.விலை இருந்தாலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story