மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா வகைகள் ஆயிரக்கணக் கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக பழநியில் கொடைக் கானல் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நத்தம், சாணார்பட்டியிலும் அதிக அளவில் மா விவசாயம் நடைபெறுகிறது. தேன் பூச்சி தாக்குதலால் மாம்பூக்கள் கருகி உதிர்ந்து விட்டன. தற்போது சீசன் தொடங்கிய நிலையிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் மாம்பழம் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ செந்தூரம் மாம்பழம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது. உள்ளூர் வரத்து இல்லாததால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story