பலாப்பழம் தேக்கமடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை!

பலாப்பழம் தேக்கமடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை!

ஆலங்குடி பகுதியில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் வருகை குறைந்ததால், பல டன் பலாப் பழங்கள் தேக்கமடைந்துள்ளன.


ஆலங்குடி பகுதியில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் வருகை குறைந்ததால், பல டன் பலாப் பழங்கள் தேக்கமடைந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் வருகை குறைந்ததால், பல டன் பலாப் பழங்கள் தேக்கமடைந்துள்ளன. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், பெரியவாடி, மறமடக்கி, செரியலூர், மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பலா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலமண்டிகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து நாளொன்றுக்கு சுமார் 50 டன் முதல் 200 டன் வரை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்நிலையில், நிகழாண்டு பலாப்பழ விளைச்சல் தொடங்கிய ஏப்ரல், மே மாதங்களில் விவசாயிகளிடம் இருந்து பலாப்பழம் கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தற்போது வியாபாரிகள் வரத்துகுறைந்துள்ளதால், ஏல மண்டிகளில் பல டன் அளவில் பலாப்பழங்கள் தேக்கமடைந்துள்ளன. இதன்காரணமாக, பலாப்பழம் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. விலை குறைவால் விவசாயிகளும், பழங்கள் தேக்கமடைந்துள்ளதால் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கீரமங்கலம் பகுதி பலாப்பழ வியாபாரிகள் கூறியது: கடந்த மாதம் வரை வெளியூர், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல்4 செய்து சென்றனர்.

இதனால்,பலாப்பழங்களுக்கு உரிய விலையும் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால் பலாப்பழங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு, காகித ஆலைச்சாலை, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலமண்டிகளில் பல டன் பலாப்பழங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே பலாப் பழங்கள் வாங்கப்படுகின்றன என்றார்.

Tags

Next Story