பெரம்பலூரில் விவசாய சங்க குழு கூட்டம்

பெரம்பலூரில் விவசாய சங்க குழு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 
பெரம்பலூரில் மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடுபகுதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய பாஜக ஆளுகின்ற மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத கொள்கைகளா கண்டித்து 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறக்கூடிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

அதனை ஒட்டி பிப்ரவரி 12 , மற்றும்13ம் தேதியில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும் தெருமுனை கூட்டங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேலை நிறுத்தம் - மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பாக மாவட்ட செயலாளர் . அகஸ்டின், மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ஆறுமுகம், மாவட்ட குழு கிருஷ்ணசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே . பொருளாளர் வேணுகோபால் மற்றும் .திராவிட கழகம் மாவட்ட தலைவர் தங்கராசு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,

இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் ஈஸ்வரன், எஸ்.டி.யு சுதந்திர தொழிலாளர் மாவட்ட செயலாளர் மாலிக் பாஷா, தொ.மு.ச சர்க்கரை ஆலை நிர்வாகி புள்ளபெத்தான், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சதாசிவம் ,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, HMS மாவட்ட துணைச் செயலாளர் நீலமேகம், மாவட்ட நிர்வாகி சுகுமாரன், விசிக சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story