சேலம் அருகே தனியார் பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே, மாடுகளுக்கு பால் சுரப்பு குறைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று தனியார் பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அடுத்த செந் தாரப்பட்டியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதே பகுதியில் உள்ள தனியார் பால் நிறுவனத் தில் உறுப்பினர்களாகி, தினமும் காலை, மாலை நேரத்தில் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை வழங்கி வந்தனர்.
இங்குள்ள பால் கொள்முதல் நிலையத்தின் மூலம், காலையில் சுமார் 1500 லிட்டர் பாலும், மாலையில் 1200 லிட்டர் பாலும்விவசாயிகள் ஊற்றி வருகின்றனர். இந்நிலையில்தனியார் பால் நிறுவனம்,விவசாயிகளுக்கு கால்நடைதீவனங்களை வழங்கியது. கடந்த 2 மாதங்களாக இந்த தீவனத்தில் அதிக அளவில் மண் மற்றும் தேங்காய் சிரட்டை துகள்கள் காணப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் அந்த தனியார் பால் நிறுவனத்தில் புகார் அளித்தும். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கலப்படகால்நடை தீவனத்தை உண்ட 150க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, பால் சுரக் கும் அளவு வெகுவாக குறைந்தது. வழக்கமாக 15 லிட்டர் வழங்கிய பசு மாடுகள், 3 லிட்டர் பால் மட்டுமே வழங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்தவிவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை தனியார் பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தம்மம்பட்டி போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து தனியார் பால் நிறுவனத்தினரிடம் விசாரணை மேற் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த விவசாயிகள், முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். கலப்பட தீவனத்தால் நோய் பாதித்த தங்களின் மாடுகளுக்கு, அரசு கால்நடை துவமனையில் சிகிச்சைத் ளித்து வருகின்றனர்.