அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் வழங்க வலியுறுத்தி தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டினை 100,க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200,பேர் அமைச்சர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

குறிப்பாக அணையின் உட்பகுதியில் இறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம். மற்றும் செல்போன் டவரில் ஏறி 8 மணி நேர போராட்டம் அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் காரினை வழிமறித்து போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் விவசாயிகளை அழைத்து பேசவில்லை எனவும் வட்டாட்சியர் கோட்டாட்சியர் வருவாய் அலுவலர் நீர் மேலாண்மை குழு ஆகியோரிடம் ஆறு கட்ட பேச்சுவார்த்தை விவசாயிகள் நடத்தியும் அந்த பேச்சு வார்த்தைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்த்துராஜ் கலந்து கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இரவு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து தண்ணீர் வழங்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவி உள்ளிட்ட 50,க்கும் மேற்பட்ட போலீசார் அமைச்சர் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அமைச்சர் வீட்டின் முன்பு தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால் தற்பொழுது அமைச்சர் கயல்விழி சுற்றுபயணத்தில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story