உழவர் விவாதக்குழு விவசாயிகள் பயிற்சி

X
உழவர் விவாதக்குழு விவசாயிகள் பயிற்சி
சிவகங்கை வட்டாரம், சக்கந்தி ஊராட்சி மானாகுடி கிராமத்தில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மையத்தின் சார்பாக உழவர் விவாதக்குழு (FDG) விவசாயிகள் பயிற்சி வேளாண்மை அலுவலர் வீரையா தலைமையில் நடைபெற்றது.
உழவன் செயலியின் பயன்பாடுகள், செயல்பாடுகள் பற்றியும், கோடை உழவு, விதைத் தேர்வு, உரப்பயிர் சாகுபடி, இலை வண்ண அட்டையினை வைத்து உர நிர்வாகம் பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பித்தார், இந்த பயிற்சியினை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ராஜா ஏற்பாடு செய்தார், உழவர் விவாத குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்
Next Story
