சரபங்கா நதியை ஆக்கிரமித்த சீமைகருவேல மரங்கள்
சீமை கருவேல மரங்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் தொடங்கும் சரபங்கா நதி ஓமலூர், டேனிஸ்பேட்டை, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளை கடந்து அரசிராமணி குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, செட்டிபட்டி, ஒடசக்கரை,சென்றாயனூர், கோணக்கழுத்தானூர். உள்ளிட்ட பகுதிகளை கடந்து தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடி அண்ணமார் கோவில் பகுதியில் காவேரி ஆற்றில் கலந்து செல்கிறது.
இந்நிலையில் தேவூர் அரசிராமணி பகுதி சரபங்கா நதியில் கடும் வறட்சியால் தண்ணீர் இன்றி வறண்டு ஆங்காங்கே முள் மரங்கழுடன் காட்சியளிக்கிறது. மேலும் இதில் அணகுன்டா பாறை ,குள்ளம்பட்டி, பழக்காரன்காடு , அம்மன் கோயில், செட்டிபட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வீடுகள் விவசாய வயல்களாகவும் பல இடங்களில் மரம் செடி கொடிகள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சரபங்கா நதி தடம் தெரியாமல் காணாமல் போயுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் மழை காலம் வருவதற்கு முன்பே வறண்டு ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன சரபங்கா நதியை அதிகாரிகள் பார்வையிட்டு தூர்வாரி மழைக்காலங்களில் தண்ணீர் தங்குதடையின்றி கடைமடை பகுதிக்கு செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்