ஒற்றைக் கொம்பு யானையை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

ஒற்றைக் கொம்பு யானையை  பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
ஒற்றைக் கொம்பு யானை 
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை கொம்பு யானையை பிடித்து வனப்பகுதியில் விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கிராமங்களான குற்றாலம், வல்லம், கண்ணுபுளி மெட்டு, மோட்டை, இரட்டை குளம் உள்ளிட்ட பகுதிக ளில் சமீபகாலமாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஒன்று புகுந்து விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொறுமை காத்துவரும் வனத்துறையினர் தற்போது அந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், வனப்பகுதிக் குள் தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தினால் தான் அந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானையானது விவசாய பகுதிக்குள் சுற்றி வருவதாகவும், ஆகவே பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் விவசாயப் பகுதிகளுக்கும், மலை அடிவாரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வல்லம் பகுதி மக்களுக்கு குற்றால வனத்துறையினர் சார்பில் தற்போது ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதே போல் கண்ணுபுளிமெட்டு, மோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வனத்துறையினர் வீதி வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story