யானைகளிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

யானைகளிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
 விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வத்திராயிருப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாய நிலத்திற்குள் காட்டுப் பகுதியில் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் யானைகளால் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் எனவே யானைகளை கட்டுப்படுத்தி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story