மஞ்சு விரட்டு காப்பீட்டு தொகையை குறைக்க விவசாயிகள் கோரிக்கை

மஞ்சு விரட்டு விளையாட்டை காப்பாற்ற காப்பீடு தொகையை குறைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேப்பங்குப்பம் அடுத்த பாக்கம்பாளையம்என்ற கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக தை மாதம் ஐந்தாம் தேதி மஞ்சுவிரட்டு விழா நடைபெறுவது வழக்கம். பாக்கம் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25க்கு மேற்பட்ட கிராமங்கள் ஒன்று கூடி,இந்த பொங்கல் விழா நடத்துவது வழக்கம். விவசாய மக்கள்ஒன்று கூடி பல நூற்றாண்டு காலமாக நடத்தி வந்த இந்த மஞ்சு விரட்டு விழா, இந்த வருடம் நடைபெறவில்லை.

இது குறித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இன்றைய தலைவர் , செய்தியாளர்களிடம் கூறிய போது , எங்கள் பகுதியில் விவசாயத்தை மட்டுமே, செய்து வரும் ஏழை விவசாய பெருமக்கள் வாழ்ந்து வரும் பகுதியாக உள்ளது. மஞ்சுவிரட்டு என்பது காலகாலமாக ஏழை பணக்காரர்கள் என்று வித்தியாசம் போக்கவும் சமூக நீதியை வளர்க்கவும், எங்கள் முன்னோர்களால் நடத்தப்பட்டு வந்த இந்த விழாவிற்க்கு,விழா நடக்கமாவட்ட நிர்வாகத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் காப்பீடு தொகையாக கட்டி வந்தோம்.ஆனால் இந்த வருடம் காப்பீடு தொகை மூன்று லட்சம் மற்றும் ஜி எஸ் டி சேர்த்து கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஏறத்தாழ இது 3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

தடையில்லா சான்று வழங்க மாவட்டத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருந்தும், தற்போது உள்ள காப்பீடு தொகையை எங்களால் கட்ட முடியாததால் இன்று மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. தெய்வ குற்றம் ஏற்படாமல் இருக்க உள்ளூர் மாடுகளை ஓட விட்டு ஆறுதல் அடைந்தோம். தமிழக பாரம்பரிய மஞ்சுவிரட்டு விழாவை காப்பாற்றவும், 25 கிராம மக்கள் ஒன்று கூடி சில நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், ஏழை விவசாயிகளை கருத்தில் கொண்டும் இந்த காப்பீடு தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story