நெற்களம் அமைத்து தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை !

நெற்களம் அமைத்து தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை !

விவசாயிகள் கோரிக்கை 

நெற்களம் அமைத்து தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே பூதுார் பகுதியில், 3,000 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அறுவடை செய்யப்பட்டு, நிலத்தில் இருந்து டிராக்டர் வாகனங்கள் வாயிலாக கொண்டு வரும் நெல் மணிகளை உலர வைப்பதற்கு, கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லாததால், மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர வைக்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அந்த வழியை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர். விவசாயிகளின் நெல்களை உலர வைப்பதற்கு, கூடுதலாக நெற்களம் அமைத்து தரக்கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் மனு அளித்துள்ளனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story