தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசிடம்  விவசாயிகள் கோரிக்கை

கோப்பு படம்

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட டெல்டா விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் போதுமான கோடைமழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்து பம்புசெட்டு வசதி உள்ள விவசாயிகள் குருவை விதை நெல் விட்டு நாற்று தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சில விவசாயிகள் நேரடி நெல் விதைக்க ஆயத்தமாக இருக்கின்றனர்.

இந்த வருடம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக அதாவது ஆகஸ்ட் மாத மத்தியில் வரும் என்று எதிர்பார்ப்பதால் குருவை சாகுபடி அனைத்து விவசாயிகளும் செய்ய வாய்ப்பு இல்லை . ஆகவே பம்புசெட்டு மூலம், மற்றும் நேரடி விதைப்பு மூலம் குருவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு இந்த வருடத்திற்கான குருவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து, தொகுப்பு திட்டத்தில் உழவு, விதை , உரம், களைக்கொள்ளி, பூச்சி மருந்து அனைத்திற்கும் சேர்த்து அதிக அளவில் நிதி ஒதுக்கி இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story