பட்டுக்கோட்டை அருகே உழவர் வயல் தின விழா 

பட்டுக்கோட்டை அருகே உழவர் வயல் தின விழா 

பட்டுக்கோட்டையில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது

பட்டுக்கோட்டையில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) இ.அப்சரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரம், ஏனாதி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பாக, அட்மா திட்டத்தின் கீழ், உழவர் வயல் தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார்.

சிறப்பு தொழில்நுட்பக் கருத்துக்கள் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஆனந்த் கலந்து கொண்டு, 'கோடை காலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பற்றியும், அவற்றின் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், விதை நேர்த்தியின் முக்கியத்துவம் பற்றியும் மண் மாதிரி சேகரிப்பு முறை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இயற்கை விவசாயி கமலக்கண்ணன் கலந்து கொண்டு அங்கக விவசாயம் பற்றியும் அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், மீன் அமிலம், அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் வேளாண்மை அலுவலர் சன்மதி வரவேற்றார்.

இந்த உழவர் வயல் தின விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி தொழில் நுட்ப மேலாளர் அமிர்த லீலியா செய்திருந்தனர். இவ்விழாவில், ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியின் நிறைவாக அட்மா திட்ட உதவி தொழில் நுட்பம் மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story