பொங்கல் கரும்பு அறுவடை செய்ய ஆயத்தமாகும் விவசாயிகள்
கரும்பு விவசாயிகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 முதல் 200 ஏக்கர் வரை,ஆண்டுதோறும் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத துவக்கத்திலேயே அறுவடை செய்யும் வகையில், பொங்கல் கரும்புகள் பயிரிடப்படும். காவிரி ஆற்றங்கரை ஓரம் நீர் வளம் மிகுந்த பகுதி என்பதால் இங்கு அதிக அளவு பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களில் உள்ள நிலையில், பொங்கல் கரும்புகளை அறுவடை செய்ய விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.சமய சங்கிலி கிராமத்திலிருந்து ஏற்றுமதி ஆகும் கரும்புகள், சேலம் நாமக்கல் ,கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சில நேரங்களில் வெளிமாநிலங்களுக்கும் அதிகளவு கரும்புகள் ஏற்றுமதி ஆகிறது.தற்போது பொங்கல் கரும்புகள் முழுமையான வளர்ச்சி அடைந்துள்ளதால், அதை அறுவடை செய்யும் காலமும் நெருங்கியுள்ளது .
தற்போது முதல் கட்டமாக வெளி மாவட்ட பகுதியில் இருந்து வருடம் தோறும் கரும்புகளை வாங்கி விற்பனை செய்யும் மாமூல் வியாபாரிகள் கரும்புகளை வாங்க, கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான விலையை நிர்ணயம் செய்வது என சமய சமயங்கிலி பகுதியில் வெளி மாவட்ட வியாபாரிகள் விவசாயிகளுடன் பேசி வருகின்றனர் .கடந்த ஆண்டு தமிழக அரசால் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் . பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் கரும்பு இடம்பெறாத நிலையில்,கரும்பு விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பிறகே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசால் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.