விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் , நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 36 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 17.6 பெட்ரிக் பன்னும் பயறுவகை 12 பெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 155 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6463 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1491 பெட்ரிக் டன்னும், பொட்டார் 4862 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 13491 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெய் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக உள்ள பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் பக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறுவடையைப் பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tags

Next Story