நாகப்பட்டினம் : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி போக மீதமுள்ள நிலங்களில் வன பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாகிட 100 சத மானியத்தில் வேம்பு தேக்கு செம்மரம் மகாகனி ஈட்டி மரம் சந்தானம் புங்கை வேங்கை மற்றும் மலைவேம்பு சவுக்கு தாண்டி மரக்கன்றுகள் வனத்துறை நாற்று பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும் .
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக முன்பதிவு செய்து அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது . விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நுகர்வோர் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன் வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை தேவேந்திரன் மற்றும் விவசாயிகள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்