விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 27 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 12.2 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 13 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 18 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6972 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1746 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 5382 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 13074 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து முழுவீச்சில் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நெல் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tags

Next Story