விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைதீர் கூட்டம் 

நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின்கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக நன ரூ.2000/- வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளைதொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறாத 31.01.2019க்கு முன் தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் மற்றும் நிலவிவரங்களை கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே பயனாளியாக இருந்து தவணை தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பணிபுரியும் வேளாண்மை விரிவாக்க பணியாளர்களை அணுகி குளறகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் புதியதாக பதிவு செய்வோர் நில விவரங்கள் மற்றும் தேவையான முக்கிய விவரங்கள் அனைத்தையும் விடும்டாமல் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றும் செய்யாதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் PMKISAN வலைதளத்தில் விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இதுவரை e-KYC செய்யாத பயணளிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள விரிவாக்க பணியாளர்களை தொடர்பு கொண்டு (Facial recognition)கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகவி, ஈட்டி மரம், சந்தனம், புங்கை, வேங்கை மற்றும் மலை வேம்பு, சவுக்கு, தான்றி ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி" மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். PMFBY தளத்தில் பழுதுகள் சரி செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் பழுது ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பயறு காப்பீட்டிற்கு இறுதி நேரம் வரை காத்திராமலி அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்ககளில் பிப்ரவரி 15க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பிப்ரவரி 15க்குள் பயறு சாகுபடி மேற்கொள்ள முடியாவிட்டால் கிராம நிர்வாக அலுவலரிடம் விதைப்பு சான்று பெற்று காப்பீடு செய்துவிட்டு சாகுப்பு செய்த பின் அடங்கல் பெற்று காப்பீடு செய்த இடத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு), தேவேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story