விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

 கன்னியாகுமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்டக் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கன்னியாகுமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்டக் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் இன்று (22.12.2023) நடைபெற்றது.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை காக்க வழிமுறைகள் குறித்தும், தரமான தென்னங்கன்றுகளை தேர்வு செய்தல் மற்றும் பசுந்தாள் உர பயிர் செய்தல் குறித்தும் காணொளி மூலமாக எடுத்துரைக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட டிசம்பர் 2023 மாத மழை விபரம் மற்றும் அணைகளின் நீர்மட்டம் விபரம் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் இயற்கை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அ.ஆல்பர்ட் ராபின்சன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.எல்.சிவகாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) எஸ்.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர்யோ.ஷீலாஜாண் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story