குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 
குமரி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பிப்ரவரி இறுதியில் நிறுத்தப்படும் என்பதால் விவசாயிகள் சாார்பாக, பயிர்களுக்கு பி.பி சானல் மூலம் மார்ச் 31ம் தேதி வரையும் தோவாளை சானல் மூலம் மார்ச் 16-ம் தேதி வரையும் தண்ணீர் விநியோகம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்குதல் உப இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.3.92 இலட்சம் மதிப்பிலான விசை உழுவை இயந்திரங்களை ரூ.1.50 இலட்சம் மானியத்தில் 2 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்கள்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், அரசு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், விவசாய சங்க பிரநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story