விக்கிரவாண்டியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
விக்கிரவாண்டியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
அரசு நிலத்தில் தனியார் வேலி அமைப்பதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வ்ணெடும் எனவும் பாஜக விவசாய சங்க தலைவர் மனு அளித்தார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு உதவி இயக்குனர் கங்கா கவுரி தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பா.ஜனதா மாவட்ட விவசாய அணி தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், அரசு புறம்போக்கு நிலத்தில் திடீரென தனிபர்கள் வேலி அமைப்பதாகவும், இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மனுவை பெற்ற உதவி இயக்குனர் கங்கா கவுரி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார், இதில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மெகருனிஷா, உதவி வேளாண்மை அலுவலர்கள் திவ்யபாரதி, ஆனந்தி, பானு, ராம மூர்த்தி, விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ரவிச்சந்தி ரன், ஆறுமுகம், கோவிந்தன், கோபி, ராஜீ, சதீஷ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story