தென்காசியில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர்இரவிச்சந்திரன் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.01.2024 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் இரவிச்சந்திரன்தலைமையில் நடைபெறவுள்ளது.
அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும், மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.