வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

 விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்கள் சாகுபடி பரப்பு நெல் 11,2869 எக்டரும், சிறு தானியங்கள் 10373 எக்டரும், பயறு வகைகள் 27922 எக்டரும், எண்ணெய் வித்து பயிர்கள் 47228 எக்டரும், கரும்பு 13124 எக்டரும், பருத்தி 54 எக்டரும் நவம்பர் 2023 முடிய செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விதைகள் விநியோகம் நெல் விதைகள் இருப்பு 299.95 மெ.டன், தானியங்கள் இருப்பு 21.96 மெ.டன், பயறு வகைகள் இருப்பு 33.42 மெ.டன், எண்ணெய் வித்துகள் இருப்பு 39.30 மெ.டன்னும் நவம்பர் 2023 முடிய இருப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் இருப்பு விபரம் யூரியா 10687, DAP 1903, MOP 1407, SSP 808, NPK Complex 9402 ஆக மொத்தம் 2023 முடிய 24209 இருப்பு உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான ஏரியில் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், அரசு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர் கூடுதலாக நியமிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதை வனத்துறையின் மூலம் தடுக்க வேண்டும், அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களிலும் மின்னனு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாடுவதற்கு நடைமேடை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றவும், பயிர்கடன் தகுதியுள்ள விவசாயிகளுக்கு வழங்கிடவும், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்கவும், உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் விரைவில் தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தனிநபர் தொடர்பான மனுக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ரிஷப் ,கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், இணை இயக்குநர், வேளாண்மை துறை அரக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.உமாபதி. மண்டல இணை இயக்குநர், கால்நடைத்துறை மரு.சோமசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், சிவா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story