விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
X

ஆட்சியர் பிருந்தா தேவி 

நேற்று நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதம் 4-வது புதன்கிழமை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டம் சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று நடந்தது.. இதில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்க உள்ளனர். எனவே, நேற்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (2-ந்தேதி) தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி அன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் இனி ஒவ்வொரு மாதம் 3-வது வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story