ஆலங்குளத்தில் பச்சை மிளகாய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஆலங்குளத்தில் பச்சை மிளகாய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
பைல் படம்


ஆலங்குளத்தில் பச்சை மிளகாய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூா், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மிளகாய், கத்தரி, வெண்டை, சீனி அவரை உள்ளிட்ட காய்கனிப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அண்மையில் பெய்த கோடை மழை காரணமாக சின்ன வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய் போன்ற பயிா்களில் மழைநீா் தேங்கியதாலும், வெயிலும் மழையும் மாறி மாறி வந்ததாலும் இப்பயிா்களின் வோ்கள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் விளைச்சல் 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது.

இதன் காரணமாக சந்தைகளுக்கு காய்கனிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததையடுத்து விலை கடுமையாக உயா்ந்தது. இதில் பச்சை மிளகாய், மழைக்கு முன்பு கிலோ ரூ.40-க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக ரூ.100-க்கு உயா்ந்தது. இந்த நிலையில் ஆலங்குளம் சந்தைக்கு மிளகாய் வரத்து முடங்கியதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனா். இதனால் சில்லறையில் கிலோ ரூ.150-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story