கடையத்தில் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய விவசாயிகள்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி கிராம விவசாயிகள் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி கிராம விவசாயிகள் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பூவன்குறிச்சி கிராமம் கனகராஜ் பாலசரஸ்வதி தம்பதியினர். கனகராஜ் கடையம் யூனியனின் முன்னாள் கவுன்சிலராக பதவி வகித்தவர். தற்போது விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு வருகிறார். இவர் வளர்த்த பசு ஒன்று சினையாக இருப்பதால் தனது உறவினர்களை அழைத்து பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தி விருந்து படைத்து வந்தார். சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்த்தினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story