திருச்சியில் வீட்டுக் காவலில் விவசாயிகள் சிறைவைப்பு
திருச்சியில் வீட்டுக் காவலில் விவசாயிகள் சிறைவைப்பு
விவசாயிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் கடந்த சில நாள்களாக தொடா் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கன்னியாகுமரி சென்று தியானம் செய்வது என்றும், இல்லையெனில் திருச்சி விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ போராட்டத்தில் ஈடுபடவும் சங்க விவசாயிகள் முடிவு செய்திருந்தனா்.
இதையறிந்த திருச்சி போலீஸாா் திருச்சி-கரூா் புறவழிச் சாலையில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அலுவலகம் மற்றும் அதன் தலைவா் அய்யாக்கண்ணு வீட்டின் முன்பும், அண்ணாமலை நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் சனிக்கிழமை அதிகாலை குவிக்கப்பட்டு, அய்யாக்கண்ணு மற்றும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனா்.