கிராம கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஊர்வலம்

கிராம கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஊர்வலம்

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஊர்வலம் சென்றனர்.

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஊர்வலம் சென்றனர்.

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி; உசிலம்பட்டியில் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படுவது 58 கிராம கால்வாய் ஆகும்.கால்வாயில் தண்ணீர் வந்தால் 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில் வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்.

ஆனால் இந்த வருடம் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.இதனால் விவசாய சங்கத்தினருடன் அனைத்து கிராம மக்களும் இணைந்து கடந்த டிசம்பர் 1 ம் தேதி உண்ணாவிரதப்; போராட்டம் நடத்திய போதும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக மற்றும் வணிகர்கள் சங்கங்கள் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று வழக்கறிஞர் சங்கமும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர்., வாடகை ஆட்டோ மற்றும் கார் ஓடவில்லை., மேலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உசிலம்பட்டி மதுரை ரோட்டிலுள்ள பிஆர்சி பணிமனை அருகேயிருந்து 1கி.மீ தூரம் ஊர்வலமாக வந்து தேவர்சிலை அருகே நின்று தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.இந்த ஊர்வலத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story