மழையால் பயிர்கள் பாதிப்பு அதிகாரிகள் மழுப்பல் பதில்

மழையால் பயிர்கள் பாதிப்பு அதிகாரிகள் மழுப்பல் பதில்

விவசாயிகள் நல கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் சரிவர வருவதில்லை எனவும் பயிர்காப்பீடு தொடர்பாக சரிவர பதில் கூறுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. இதில், கால்நடை பராமரிப்பு, வருவாய் துறை என முக்கியத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் இக்கூட்டத்திற்கு முறையாக வருவதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு விசை தெளிப்பான், திரவ உயிர் உரங்கள் என 13 பேருக்கு, 7.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இக்கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்த பல்வேறு புகார்களை தெரிவித்தனர்,

அவர்கள் கூறியதாவது,கூட்டு பட்டா வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க மறுக்கின்றனர் , தனியார் மருந்து கடைகள் மீது, வேளாண் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை. மருந்துகள் தரம், காலாவதி நாட்கள் போன்றவை குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை , கிராமப்புறங்களில், நகை அடகு கடை வைத்திருப்போர் கூட வேளாண் மருந்துகள் விற்பனை செய்கின்றனர். வேளாண்மை பூச்சி மருந்துகளை விற்போரை முறைப்படுத்த வேண்டும்.

குன்றத்துார் ஒன்றியத்தில், பிரதமரின் 'கிசான் திட்ட அட்டை பலருக்கும் கிடைக்கவில்லை. பலமுறை இதுகுறித்து தெரிவித்தும், எங்களுக்கு கிடைக்கவில்லை , மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு, காப்பீடு செய்த போதும், மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு காப்பீடு தொகை சரியாக கிடைக்கவில்லை. காப்பீடு திட்டம் சம்பந்தமாக, அதிகாரிகள் தெளிவாக கூறுவதும் இல்லை என பல குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

Tags

Next Story