கால்வாயில் தண்ணீர் திறக்க கையில் நாற்றுடன் ஆட்சியரை சந்தித்த விவசாயிகள்
நாற்றுடன் வந்த விவசாயிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்து தற்காலிமாக தண்ணீர் விடப்பட்டது. மார்ச் மாதம் 15 ம் தேதி அணை முடப்பட்டது. வழக்கமாக ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு பயிர் சாகுபடி செய்து வருவது பல ஆண்டுகளாக நடைபெற்று வடுகிறது. தற்போது துவாச்சி பகுதியில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
விவசாயிகளுக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இப்பணி நடைபெறுவதல் நெல் பயிர் சாகுபடி செய்து 55 நாட்கள் மற்றும் 25 நாட்கள் கடந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர், வேளாண்மை அதிகாரி. பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து தோவாளை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கையில் நாற்றுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.