விவசாயி கொலை - வாலிபர் கோர்ட்டில் சரண்

விவசாயி கொலை - வாலிபர் கோர்ட்டில் சரண்

நீதிமன்றம் 

வீராணம் அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சேலம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சம்பு என்ற சண்முகம். விவசாயியான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பல் ஒன்று அடித்து கொலை செய்தது. இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

மேலும் இந்த கொலை தொடர்பாக பள்ளிப்பட்டியை சேர்ந்த சண்முகம், சதீஷ்குமார் உள்பட 7 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக குமார் (வயது 28) என்பவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனிடையே போலீசாரால் தேடப்பட்ட குமார் நேற்று சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட்டு தங்க கார்த்திகா உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story