கலெக்டரிடம் விவசாயிகள் மனு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பாக விருதுநகர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாய சங்கம் சார்பாக மாநில தலைவர் O.A. நாராயணசாமி தலைமையில், கடந்த 2023- 2024 ஜனவரி மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.

மேலும் அவர்கள் பயிரிட்ட மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் 80% வெள்ளத்தால் அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது என்றும் மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ 20000 தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடு தொகையை மாவட்ட நிர்வாகம் இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சரியான முறையில் வழங்கிவில்லையென்றும் பயிர்காப்பீட்டில் பல குளறுபடிகள் உள்ளது என்றும் ஆகையால் பயிர்காப்பீடு அறுவடைக்கணக்கெடுப்பை விவசாயிகளுக்கு முறையாக மாவட்ட நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் O. A - நாராயணசாமி தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆர்பாட்த்தில் ஈடுபட்டனர் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்

Tags

Next Story