திமுக மாவட்ட செயலாளரிடம் விவசாயிகள் மனு

திமுக மாவட்ட செயலாளரிடம் விவசாயிகள் மனு
X

விவசாயிகள் மனு

நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்வு இன்று மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் திசையன்விளை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் வீனஸ்வீர அரசு தலைமையில் கலந்து கொண்டு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும், நம்பியாற்றின் இரு கரைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நம்பியாற்றின் தண்ணீரை பிரித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிகைகள் அடங்கிய மனுவை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் தற்போது தமிழகத்தில ஏழை எளிய மக்கள், விவசாயிகளுக்கான ஆட்சி நடக்கிறது எனவே உங்களின் கோரிக்கைகள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். இதில் விவசாயிகள் சங்க தலைவர் ராஜன், செயலாளர் கணேசபாண்டி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story