கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

 பழனி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பழனி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி, கோம்பைபட்டி, வரதமாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாய நிலங்களில் புகும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று காலை முற்றுகையிட முயன்றனர். தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன்முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story