விவசாய நிலங்கள் வழியே காற்றாலை மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே விவசாய நிலங்கள் வழியே காற்றாலை மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலனூரை அடுத்த பெரமியம் ஊராட்சி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி தயாரிப்பதற்காக அதிக அளவில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை சாலைகளின் ஓரம் உயர்மின் கோபு ரங்கள் அமைத்து புதிய மின் பாதைகளை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. பம்மிவளையம் என்ற கிராமத்தில் உயர் மின் கோபுரம் அமைத்து அதன் வழியாக புதிய மின் கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மின் பாதை அமைக்கும் இடத்தில் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள் ளன.அங்கு விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி தோட்டத்தின் வேலிகளை அனுமதியின்றி உடைத்து அதில் ராட்சத மின் கம்பிகளை கொண்டு செல்லும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் மின்பாதை அமைப்பதற்கு தோட்டத்து வேலிகளை சேதப்படுத்தி அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தக வல் அறிந்ததும் மூலனூர் போலீசார் மற்றும் தாசில்தார் விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாளை (இன்று) இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கூறிய தன் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டு மின் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தினர் திரும்பி சென்றனர். இத னால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story