சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் மனு!

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு:  விவசாயிகள் மனு!

விவசாயிகள் போராட்டம்

இந்த சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வளையபட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான முயற்சியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிப்காட் திட்டத்திற்காக அங்குள்ள ஏரி, குளம், ஓடை, மேய்ச்சல் நிலங்களை மறைத்து வருவாய்த்துறையினர் வரைப்படம் தயாரித்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொறுப்பு) முத்துராமலிங்கத்திடம் வழங்கினர். சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை, சிப்காட் திட்டம் அமையவுள்ள பகுதியில் இருக்கும் ஏரி, குளங்கள், ஓடைகளை அமைத்து வரைப்படம் தயாரித்து வருவாய்த்துறையினர் முறைக்கேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story