தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்கிட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் 17 திங்கட்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். கர்நாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர் வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி, குளங்களையும் உடனடியாக தூர்வாரி மராமத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையொட்டி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி, நலிவடைந்த விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முகமது இப்ராகிம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ்,
எஸ்.ஞானமாணிக்கம், கே.முனியாண்டி, கே.தமிழரசன், சி.பாஸ்கர், கே.அபிமன்னன், ஆர்.உதயகுமார், எஸ்.வி. கருப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராவூரணி பெரியார் சிலை அருகில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர்கள் சி.ஆர்.சிதம்பரம் (பேராவூரணி), வி.ஆர்.கே.செந்தில்குமார் (சேதுபாவாசத்திரம்), விவசாயத் தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி (சேதுபாவாசத்திரம்) வே.ரெங்கசாமி (பேராவூரணி) ஆகியோர் கண்டன உரையாற்றினர். 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
