பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை  உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் 

பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தவும், பசும்பால் லிட்டருக்கு ரூ.45-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.54-ம் வழங்க வலியுறுத்தி சேலம் பால் பண்ணை முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், நெற்றியில் நாமம் போட்டும், கறவை மாடுகள் மற்றும் பால் கேனுக்கு நாமம் போட்டும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தி தி.மு.க. அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story