மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள்  ஊர்வலம்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் ஊர்வலம் சென்றனர். 

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் ஊர்வலம் சென்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை குறித்த காலத்தில் திறக்க வேண்டும், கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நீதி கேட்டு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று இரவு சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடைப்பயணமாக திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானாவில் இருந்து ஏ.வி.ஆர். ரவுண்டானா வரை வந்தனர். இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர் பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி பேசி முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அதை வைத்து அவர் அரசியல் செய்து வருகிறார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காததால் தமிழ்நாடு, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 3 ஆண்டுகளாக தமிழக அரசு விவசாயிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஏற்பட்ட நிலைமை தான் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சருக்கு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story