சேலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

சேலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் போராட்டம்


தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது. இதனால் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் வழியே கர்நாடகா செல்லும் ரயில் சேவையை முடக்கும் வகையில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது ரயில் நிலையம் நுழைவு வாயிலிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கபட நாடகமாடுவதால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story