ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்

ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்

மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணி

ஆடி பட்ட சாகுபடி துவங்க உள்ளதையடுத்து ஆழ்துளை கிணறுகளின் மின்மோட்டர்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்படுகின்றன. சொர்ணவாரி பருவத்தில், 20,000 ஏக்கர் மட்டுமேநெல் சாகுபடி செய்யப்பட்டது. கோடை மழைக்கு பிறகு, நெல், வேர்க்கடலை, உளுந்து ஆகிய பல வித பயிர்களை சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர். கடந்த சொர்ணவாரி பருவம் சாகுபடி செய்யாத விவசாயிகளின் ஆழ்துளை கிணறுகள் ஆங்காங்கே பழுதடைந்துள்ளன.

ஆடி பட்டத்திற்கு சாகுபடி செய்வதற்கு ஏற்ப, விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, புள்ளலுார், கம்மவார்பாளையம், மூலப்பட்டு, மணியாட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது நீக்கும் பணியை, தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக செய்து வருகின்றனர். ஒரு சில கிராமங்களில், மின் மோட்டார் பழுதுநீக்குவோரை, வெளியூரில் இருந்து அழைத்து வந்து, பழுது நீக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக, ஆடி பட்டம் சாகுபடிக்கு மின் மோட்டார்கள் பயன் படுத்த சவுகரியமாகஇருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன்தெரிவித்தனர்.

Tags

Next Story