கண்மாய் மதகை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை!.

X
கண்மாய் மதகை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
ஓட்டப்பிடாரம் அருகே கண்மாய் மதகை சரி செய்ய நெல் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகள் இயங்கி வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால் ஓட்டப்பிடாரம் பகுதியில் 72 கம்மாய் முழுமையாக நிரம்பிய இந்த நிலையில் பசுவந்தனை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வேட்டவராயன் என்ற கண்மாய் மதகு பழுதடைந்த நிலையில் இருப்பதால் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் தண்ணீர் வீணாகி நெற்பயிர் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொள்வதால் நெல் பயிர் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனால் இளைஞர்கள் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இளைஞர்கள் குடத்தில் தண்ணீரை எடுத்து கண்மாயில் ஊற்றினர். எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் விரைவாக கம்மாயில் உள்ள மதகை சரி செய்து தந்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
