தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகள் - அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிப்பு

தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகள் - அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிப்பு

 நெல் கொள்முதல் பாதிப்பு 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகளால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிப்பு திருமருகல் ஒன்றியத்தில் தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகளால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிப்படைந்துள்ளது. நெல் கொள்முதல் நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டதால் விவசாயிகள் தனியாரிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.இயந்திரம் மூலம் இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை செய்யபட்ட நெல் மூடைகளை விவசாயிகள் தமிழக அரசு சார்பில் தொடங்கபட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருமருகல் ஒன்றிய பகுதியில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டது. சன்ன ரகம் ஒரு கிலோ ரூ. 23.10 என 40 கிலோ மூட்டை ரூ.924-க்கும் பொது ரகம் ரூ.22.65 என ரூ.906 க்கும் அரசால் விலை நிர்ணயம் செய்யபட்டது.தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.30 வரை கொள்முதல் செய்வதால் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டினர்.இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய நெல் கொள்முதல் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களை பாதியில் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரகம் ரூ.23.10 -க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.30 வரை வாங்குகின்றனர்.60 கிலோ எடையுள்ள நெல்லை விற்றால் ரூ.400 வரை லாபம் கிடைக்கிறது.மேலும் அறுவடை செய்த நெல்லை அதே இடத்திற்கு வந்து தனியார் கொள்முதல் செய்து கொள்வதால் எங்களுக்கு வாகன செலவு குறைகிறது.ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கவில்லை என்றனர்.

Tags

Next Story