மின்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் அறிவிப்பு 

மின்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்  அறிவிப்பு 

தட்கல் முறையில் பணம் செலுத்தி 6 வருடங்கள் ஆகியும் இணைப்பு வழங்காத மின்வாரியத்தை கண்டித்து, ஜூலை.2 இல் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


தட்கல் முறையில் பணம் செலுத்தி 6 வருடங்கள் ஆகியும் இணைப்பு வழங்காத மின்வாரியத்தை கண்டித்து, ஜூலை.2 இல் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், ஒன்றியம், மேலமணக்காடு கிராமத்தில், பொதுமக்களின் உயிர்நாடியான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யத் தவறிய உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேல மணக்காட்டில் உயர்திறன் கொண்ட மின்மாற்றியை அமைக்காமல் காலம் கடத்தும் மின்சாரத் துறையை கண்டித்தும், ருத்திரசிந்தாமணி ஊராட்சி சீகன்காடு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராமன் என்பவர் ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வேண்டி தட்கல் முறையில் பணம் செலுத்தி 6 வருடங்கள் ஆகியும், இது சம்பந்தமாக மின் இணைப்பு வேண்டி பலமுறை மனு கொடுத்தும், நேரில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மின்வாரியத்தை கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பேராவூரணி அருகே உள்ள ரெட்டைவயல் கடைவீதியில் ஜூலை 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளைச் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் சாலை மறியல் நடைபெறும். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். மனோகரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். வாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையா, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story