விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
பாலூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப் பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூரில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு பட்டணங்கால்வாய் மிடாலம் கிராமம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கீழ்குளம் கோபால் தலைமையிலான விவசாயிகள் இன்று திடீரென திரண்டனர். பின்னர் அலுவலகத்தின் உள்ளே சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும் பட்டணங்கால்வாயின் கடைமடை பகுதிகளான ஆலஞ்சி, கருங்கல், தேவி கோடு ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.இதனால் பயிர்கள் நீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண் ணீரை நிறுத்தியுள்ளனர். எனவே அரசுக்கு சரியான தகவலை தராத அதிகாரிகளை கண்டித்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரி வித்தனர்.இந்த போராட்டத்தில் மத்திக்கோடு ஊராட்சி துணைத்தலைவர் ஜெனோ, பாசன சங்க நிர்வாகிகள் தங்கதுரை, குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட பலர் பங்கேற்றனர்.