டி.சி.எம்.எஸ் முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல் போராட்டம்

டி.சி.எம்.எஸ் முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல்  போராட்டம்

போராட்டம்

திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட கைலாசம்பாளையத்தில் உள்ள நிலத்தை ஒரு மாதத்தில் கையகப்படுத்துவதாக கூறி இதுவரை கையகப்படுத்தாத டி.சி.எம்.எஸ் நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் செயதனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நிலம் தேவைப்பட்ட போது கைலாசம்பாளையத்தில் உள்ள ஒரு அறநிலையத்துறை இடத்தை சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அறநிலையத் துறைக்கு செலுத்தி நிலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தில் எந்த பயன்பாடும் மேற்கொள்ளாமல் இருந்ததால் அதை ஊர் மக்கள் கோயில் பண்டிகைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலத்தை மீட்டு தர கோரி திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது .

இந்த நிலையில் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் வாயில் முன்பாக முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தை கைவிட்டு அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு வருமாறு திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரி விஜய சக்தி கோரிக்கை விடுத்தும், மாவட்ட ஆட்சித் தலைவர் வராமல் நாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என கூறி விவசாயிகள் வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

இதனால் டிசிஎம்எஸ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறும்போது பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விவசாயிகளிடம் பெற்ற கமிஷனிலிருந்து பணம் கொடுத்து வாங்கிய நிலத்தை கையகப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஒரு மாத காலத்தில் நிலத்தை கையகப்படுத்துவதாக கூறி இருந்தும் இதுவரை கையகப்படுத்தவில்லை. மேலும் உயர் நீதிமன்றம் வழிகாட்டி நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு நிலத்தை மீட்டுத் தரும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார். சொந்தமாக நிலம் வைத்திருந்தும் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை வாடகைக்கு எடுத்து மாதம் தோறும் ஒன்றை லட்சம் ரூபாய் வரை டிபி சி எம் எஸ் நிர்வாகம் வீணாக்கி வருவது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.போராட்டம் காரணமாக திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது

Tags

Next Story