நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்

நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே விழுதியூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் கொள்முதல் நிலைய வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விழுதியூர் பகுதியில் குறுவை நெல் அறுவடை சாகுபடிகள் முடிந்து, அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளோம் . கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக காத்திருந்தும் இதுவரை கொள்முதல் பணிகளை அதிகாரிகள் தொடங்க வில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லை பாதுகாக்க மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே கொள்முதல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்" என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story