வைகையாற்றில் ஷட்டர்கள் உடைப்பால் விவசாயிகள் வேதனை

வைகையாற்றில் ஷட்டர்கள் உடைப்பால் விவசாயிகள் வேதனை

ஷட்டர் உடைப்பு 

மானாமதுரை அருகே உள்ளது வன்னிக்குடி கரிசல் குளம். இந்த கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடைசி எல்லை பகுதியான இந்த பகுதிக்கு வைகை ஆற்றில் இருந்து ஆதனூர் வழியாக கீழபசலை அருகே வன்னிக்குடி கரிசகுளத்திற்கு தண்ணீர் பிரிந்து செல்லும். அதன் அருகிலேயே இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளில் கான்கிரீட் கல்லுடன் மூன்று ஷட்டர்கள் போடப்பட்டு இருந்த நிலையில் ஷட்டர்கள் முழுவதும் சில நாட்களாக உடைந்து காணப்படுவதால் வன்னிக்குடி கரிசல்குளத்திற்க்கு தண்ணீர் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் வைகையில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி, சூடியூர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும். இதனால் வன்னிகுடி கரிசல்குளத்திற்கு தண்ணீர் செல்வதில் கடும் பாதிப்பு ஏற்படும். ஷட்டரை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பொதுப்பணித்துறையினர் அல்லது மானாமதுரை பொதுப்பணி துறையினர் இதனை சரி செய்யாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story